ஃபேனை ரிப்பேர் பார்த்த இளம் பெண்... மின்சாரம் தாக்கியதால் நேர்ந்த விபரீதம்.!
ஃபேனை ரிப்பேர் பார்த்த இளம் பெண்... மின்சாரம் தாக்கியதால் நேர்ந்த விபரீதம்.!
சென்னை கொடுங்கையூரில் டேபிள் பேனை பழுது பார்த்த இளம் பெண் மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சர்வேஷ் 24 வயதான இவருக்கு பவித்ரா என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சர்வேஷ் பெயிண்டர் ஆக வேலை செய்து வருகிறார்.
தமிழகத்தில் நிலை வரும் கடுமையான கோடை வெயிலை சமாளிக்க வீட்டில் டேபிள் பேனை பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த ஃபேன் நேற்று பழுதானதால் அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் பவித்ரா. அப்போது எதிர்பாராத விதமாக அவன் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.