குஜால் விளம்பரத்தை நம்பி... பல லட்சங்களை இழந்த கோவை இளைஞர்... 7 பேர் கைது
குஜால் விளம்பரத்தை நம்பி... பல லட்சங்களை இழந்த கோவை இளைஞர்... 7 பேர் கைது
போலியான பாலியல் தொழில் விளம்பரத்தை நம்பி கோவையை சார்ந்த இளைஞர் ஒருவர் 8 லட்ச ரூபாய் வரை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
லோகாண்டோ என்ற பாலியல் வலைதளம் கால் கேர்ள்ஸ் மற்றும் கால் பாய்ஸ் உல்லாசத்திற்கு இருக்கிறார்கள் என்ற விளம்பரத்தின் மூலம் மோசடி செய்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் நபர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது. மேலும் இவர்கள் மோசடி செய்த பணத்தை வங்கிப் பரிமாற்றம் செய்வதற்கு கால் பாய்ஸ் ஆக பணியாற்ற ஆர்வம் தெரிவித்த இளைஞர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் போலியான விளம்பரத்தை நம்பி கோவையை சார்ந்த தியாகு என்பவர் ஏழு லட்சத்தி 84 ஆயிரம் ரூபாய் இழந்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் காவலர்களிடம் புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை ஐபி முகவரி மற்றும் கே ஒய் சி ஆகியவற்றின் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டது.
இதனைத் தொடர்ந்து மும்பையில் பதுங்கி இருந்த அப்சல் ரகுமான் (24), கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), விக்னேஷ் வீரமணி (25), பிரேம்குமார் (33) ஆகிய ஏழு பேரை அடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 34 செல்போன்கள், 36 சிம் கார்டுகள் 15 ஏ டி எம் மற்றும் வங்கி அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களது வங்கிக் கணக்கில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் முடக்கப்பட்டு இருக்கிறது கைது செய்யப்பட்ட ஏழு பேரில் 5 பேர் பொள்ளாச்சியைச் சார்ந்தவர்கள் என்றும் ஒருவர் விழுப்புரம் பகுதியைச் சார்ந்தவர் மற்றொருவர் மும்பையைச் சார்ந்தவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.