இது இந்தித் திணிப்பு தான்..! கோரிக்கை வைத்த பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.!
இது இந்தித் திணிப்பு தான்..! கோரிக்கை வைத்த பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.!
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை வைத்துள்ளார் பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பிதழில் விடுதலை நாள் பவள விழாவைக் குறிக்க Azadi Ka Amrit Mahotsav என்ற இந்தி முழக்கம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்!
விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை ’’சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா” என தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத் தான் பயன்படுத்த வேண்டும். அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!
அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்பு தான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?
அனைத்து தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.