ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் பதறிய கிராமம்..!
ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் பதறிய கிராமம்..!
கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பா.ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணியினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
பி.எஃப்.ஐ அமைப்பினர் மீதான என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு நடந்துவரும் இந்த சம்பவங்களால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி எச்சரித்துள்ளார்.மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள பி.முட்லூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகியும், சமூக சேவகருமான சீனு என்கிற ராமதாஸ் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து பரங்கிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.