அண்ணா பல்கலை.தேர்வு முறையில் அதிரடி மாற்றம்; மாணவர்கள் முயற்சிக்கு கைமேல் கிடைத்த பலன்.!
Anna univercity exam procujer change
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று தேர்வுமுறையில் பல்கலைக்கழகம் மாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் அனைவரும் அவர்கள் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது பழைய தேர்வு முறையை கொண்டு வர வேண்டும் என்பதுதான்.
பழைய தேர்வு முறையில் ஒரு செமஸ்டரில் தோல்வியடைந்தால் அடுத்த செமஸ்டரிலேயே அந்த பாடத்திற்குரிய தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தால் கொண்டுவரப்பட்ட தேர்வு முறை மாற்றமானது பெரும்பாலான மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அந்த தேர்வு முறையானது முதல் செமஸ்டரில் தோல்வியடைந்தால் அந்த படத்தினை மூன்றாவது செமஸ்டரில் தான் எழுதி தேர்வு பெற வேண்டும் என்ற கட்டாய நிலை இருந்தது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவிக்கும்போது: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பழைய தேர்வு முறை மீண்டும் கடைபிடிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.