கொரோனா ஊரடங்கு! தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
Anna university postponed april may exam
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகின்றது. மேலும் இத்தகைய கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில்,5734 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் இதுவரை 738 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நோய் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஊரடங்கை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு புதிய தேர்விற்கான அட்டவணைகள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.