×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: பொய்யும் புரட்டும் வேளாண் பட்ஜெட்.. அம்புலி மாமா கதை என்னாச்சி? - வேளாண் பட்ஜெட்டுக்கு அண்ணாமலை ஆவேசம்.!

#Breaking: பொய்யும் புரட்டும் வேளாண் பட்ஜெட்.. அம்புலி மாமா கதை என்னாச்சி? - வேளாண் பட்ஜெட்டுக்கு அண்ணாமலை ஆவேசம்.!

Advertisement

பட்ஜெட் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சார்பில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பில் வேளாண் துறைக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துதல், பழைய திட்டங்கள் நீட்டிப்பு, கரும்பு கொள்முதல் சிறப்பு ஊக்கத்தொகை உயர்வு, நிலமில்லாத விவசாயிகளின் இழப்புக்கு நிதிஉதவி உயர்த்துதல் என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறு இருந்தன. இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, வேளாண் நிதிநிலை அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிவிப்பாக உள்ளது என விமர்சித்துள்ளார்.

வரிப்பண வீணடிப்பே மிச்சம்

இதுதொடர்பாக அண்ணாமலையின் எக்ஸ் பதிவில், "வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். 

இதையும் படிங்க: TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025: ஆர்ஆர்டிஎஸ் இரயில் சேவை... அரசு அறிவிப்பு.!

தமிழக மக்கள் முட்டாள்களா?

கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?

பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது?

பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?

வேளாண் பட்ஜெட் வெறும் காகிதம் தான்

நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #JustIN: தமிழ்நாடு பட்ஜெட் 2025 எப்படி? நான்கு வரிகளில் முடித்த அண்ணாமலை.! என்ன சொன்னார் தெரியுமா? 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TN Budget 2025 #TN Agri Budget 2025 #annamalai #dmk #bjp #அண்ணாமலை #வேளாண் நிதிநிலை அறிக்கை #பாஜக #திமுக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story