×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூன்றாவது திருமணத்திற்கு தயாரான "அன்னபூரணி அரசு அம்மா"; இவருடன் தானாம்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே?

மூன்றாவது கல்யாணத்திற்கு தயாரான அன்னபூரணி அரசு அம்மா; இவருடன் தானாம்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே?

Advertisement

அன்னப்பூரணி தான் மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், கணவரை விடுத்து அரசு என்ற நபருடன் விரும்பி வாழ்க்கையை தொடங்கிய அன்னபூரணி, அரசுவின் மரணத்திற்கு பின்னர் தன்னை ஒரு ஆன்மீக சக்தியாக அறிவித்துக்கொண்டு உலாவி வருகிறார். 

கீழ்பென்னாத்தூரில் கோவில்

இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூரில் தனக்கு சொந்தமாக கோவில் ஒன்றையும் கட்டி, அங்கு வரும் நபர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி, தன்னையே இறைசக்தியாக அறிவித்து சுற்றி வருகிறார். இவரை ஆதரவிற்கும் ஒருசிலர் இருக்கின்றனர்.  

இதையும் படிங்க: தீபாவளி விடுமுறை ஷாக்.. விமான கட்டண விலை கிடுகிடு உயர்வு..! 

மூன்றாவது திருமணம்

அன்னபூரணிக்கு எதிராக பல ஊடகங்கள் நிதர்சன குரலை முன்வைக்க தொடங்கியதால், ஆவேசமான அன்னபூரணி தனது செயல்பாடுகளை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதனிடையே, அவர் மூன்றாவது திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். 

கணவராக ரோஹித்

அதாவது, தனியாக இந்த சமூகத்தில் இருந்து வரும் துன்பங்களை எதிர்கொள்ள இயலாமல், இறைசக்திக்காக அர்ப்பணித்த ரோஹித் என்பவரை கரம்பிடிக்கப்போவதாகவும், அரசுவை கரம்பிடித்த அதேநாளில் ரோகித்துடன் திருமணம் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

பாதுகாப்பு கருதி திருமணம்

இந்த விஷயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "என்னுடைய பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பு. நவம்பர் 28 2024 அன்று அரசுவின் இன்னொரு அத்தியாயம் ஆரம்பம். அதாவது அரசுவின் அடுத்த பரிணாமம் ஆரம்பம். அப்பாற்பட்ட சக்தி என்னை இயக்கினாலும், சமுதாயத்தின் பார்வையில் தனி ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு ஏற்படும் இடையூர்களால் என் பாதுகாப்பு கருதியும் சமுதாயத்தினால் எனக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி என்னுடைய ஆன்மீக சேவையை சுதந்திரமாக செய்யவும், 

ஆன்மீகத்துக்கு தன்னை அர்ப்பணித்த ரோஹித்

என்னுடைய நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள எந்த ஒரு சுயநலமும் இன்றி விருப்பு வெருப்பின்றி அர்பணிப்பு உணர்வுடன் என்னுடைய அருளை உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கும், நானும் அரசுவும்  திருமணம் செய்து கொண்ட  நாளான அதே நவம்பர் 28 ல், நான் என்னுடைய ஆன்மீகத்திற்காக தன்னை அர்பணித்த ரோகித்தை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அறிவிக்கிறேன். 

திருமணத்துக்கு வாங்க, ஆசி வாங்கிட்டு போங்க

அன்றைய தினத்தில் விருப்பம் உள்ளவர்கள் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வாங்கி செல்லவும். என்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உங்கள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து நீங்கள் கேட்பது அனைத்தும் கிடைக்க செய்து உங்களை உங்கள் குடும்பத்துடன் கொண்டாட வைப்பதற்கு அளப்பறிய சக்தியுடனும் அளப்பறிய அருளுடனும் உங்களுக்காக வீற்றிருக்கும் உங்கள் அன்பு அன்னை.

மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை  சேவையாகதான் செய்வேன். சத்தியத்திற்கு மட்டும் கட்டுபட்டு சத்தியம் என்னை எப்படி இயக்குகிறதோ அதன்படி மட்டுமே இயங்குவேன்- அன்னபூரணி அரசு" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது பக்தர்கள் வருத்தம்

பொதுவாக கோவிலில் உட்பட எங்கு திருமணம் நடந்தாலும், அங்கு திருமண ஜோடிகளை வாழ்த்தி செல்வார்கள். பெரியோர்களின் 60, 100வது திருமண நிகழ்வில், அவர்களிடம் ஆசி பெறுவார்கள். வாழ்ந்து மறைந்த தெய்வங்களின் கோவில்களில் நடக்கும் திருவிழாக்களில், திருக்கல்யாணத்தில் இறைவனிடம் ஆசியைப்பெற பலரும் செல்வார்கள். இங்கு அன்னப்பூரணி தன்னிடம் ஆசிவாங்கிச்செல்லுமாறு தெரிவித்துள்ளார். இவ்வாறான நபர்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தாவிடில், இந்த சமுதாயம் பல கேலிகளுக்கு உள்ளாகும் எனவும் ஆதங்க குரல்கள் எழுகின்றன.

திருமணம் தொடர்பான அறிவிப்பு இங்கே

 

இறை சக்தியாலையே இறை சக்திக்கு பாதுகாப்பு கொடுக்க முடியலைன்னா., அவுங்களை நம்பி...

 

இதையும் படிங்க: இராஜபாளையம்: எடுத்தேன் பாரு ஓட்டம்.. பணத்தை இழந்து சுத்துப்போட்ட மக்கள்.. 1 இலட்சத்துக்கு வாரம் ரூ.10 ஆயிரமாம்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Annapurani #tamilnadu #Tiruvannamalai #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story