பெண் காவல் அதிகாரிக்கு கன்னத்தில் பளார் விட்ட போராளி நந்தினி; அக்கா-தங்கையை கைது செய்த காவல்துறை.!
பெண் காவல் அதிகாரிக்கு கன்னத்தில் பளார் விட்ட போராளி நந்தினி; அக்கா-தங்கையை கைது செய்த காவல்துறை.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வைத்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையை சார்ந்த நந்தினி (வயது 30), சகோதரி நிரஞ்சனா (வயது 25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பி வருகின்றனர்.
இருவரும் ஊட்டிக்கு சென்று ஆர்.எஸ்.எஸ் போராட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த செல்வதாக அறிவித்து இருந்தனர். இதனால் இருவரையும் தடுத்து வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது.
இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பேருந்தில் பயணம் செய்த நிலையில், தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவ்வழியே செல்லும் பேருந்துகள் சோதனைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டன.
காலை நேரத்தில் நடந்த சோதனையில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் பயனாகவே, அவர்களை பெண் அதிகாரி பேருந்தில் இருந்து கீழே இறங்கி வர அறிவுறுத்தியுள்ளார். அப்போது, நந்தினி பெண் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
மேலும், அக்கா-தங்கையாக சேர்ந்து பெண் அதிகாரியை கன்னத்தில் அடித்துள்ளனர். இதனால் பெண் அதிகாரி உடன் இருந்த அதிகாரிகளை அழைத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.