CCTV காட்சிகள் அனைத்தும் அழிந்துவிட்டது! அப்போலோ மருத்துவமனை அதிர்ச்சி விளக்கம்!
Apollo hospital says all cctv captures are deleted
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணாமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ௭௫ நாட்கள் சிகிச்சை நடைபெற்ற நிலையில் ஜெயலலிதா இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது.
மேலும் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை நடைபெறும்பொழுது முக்கிய நிர்வாகிகள் யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்தது. இதனால் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் தொடங்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மருவமனையில் சிகிச்சை பெரும் CCTV காட்சிகளை தாக்கல் செய்யுமாறு அப்போலோ நிறுவனத்திற்கு ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தற்போது அப்போலோ நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது கைவசம் இல்லை எனவும் “அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் ஒருமாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே வீடியோ பதிவை சேமிக்க முடியும்.
புதிதாக பதிவுகள் சேமிக்கப்படும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும். சிறப்பு உத்தரவுகள் இருந்தால் மட்டும் கூடுதலான நாட்கள் வீடியோ பதிவு சேமித்து வைக்கப்படும். ஆகவே ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான வீடியோ பதிவுகள் இல்லை. அவற்றை தாக்கல் செய்ய இயலாது” என அப்போலோ தரப்பு பதில் அளித்துள்ளது.
ஆனால் இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக இருப்பதால் அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் கூறுகையில் “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் அழிந்துவிட்டதாகவும், இரண்டாம் தளத்தில் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது சிசிடி காட்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
உளவுப்பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் நிறுத்திவைக்க சொன்னதாகவும் அதனாலேயே நாங்கள் CCTV காட்சிகள் பதிவாவதை நிறுத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.