×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவில் அறங்காவலர்களாக தெய்வ பக்தி இல்லாதவர்களை நியமிக்க, அனுமதிக்க முடியாது ... சென்னை உயர்நீதிமன்றம்..!!

கோவில் அறங்காவலர்களாக தெய்வ பக்தி இல்லாதவர்களை நியமிக்க, அனுமதிக்க முடியாது ... சென்னை உயர்நீதிமன்றம்..!!

Advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு கோவில்களிவ் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பிப்பித்தவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தெய்வ பக்தி கொண்டவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத யாரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறினர்.  அரசியல் சார்பு குறித்த கேள்வி அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்று நீதிபதிகள் மீண்டும் வலியுறுத்தினர். 

அறங்காவலர் தேர்வுக்காக மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறநிலைய துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Temple trustees #Appointing non devout people #Madras High Court
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story