சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 9 பேர் கும்பல்: அரியலூரில் பேரதிர்ச்சி.. பரபரப்பு தகவல்.!!
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 9 பேர் கும்பல்: அரியலூரில் பேரதிர்ச்சி.. பரபரப்பு தகவல்.!!
15 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு என அழைத்து சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பலுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஜெயங்கொண்டத்தை அதிரவைத்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 30). கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக 15 வயதுடைய சிறுமியை வீட்டு வேலைக்காக சந்தா அழைத்து சென்ற நிலையில், சிறுமியின் உடல்நலம் சரியில்லை என்று கூறி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்கு அனுமதி செய்யவே, சிறுமிக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இதனால் பேரதிர்ச்சியடைந்த பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சிறுமியை வீட்டு வேலைக்கு என அழைத்து சென்ற சாந்தா, அவரை பாலியல் தொழிலில் மிரட்டி ஈடுபடுத்தியது அம்பலமானது. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவலாவது, சிறுமியை அழைத்து சென்ற சாந்தா, கீழப்பழுவூரை சேர்ந்த சந்திரா (வயது 30) என்ற பெண்ணிடம் அவரை ஒப்படைத்துள்ளார். அவர் வி. கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிக்கு சிறுமியை அழைத்து சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்த விஷயத்திற்கு சாந்தாவும் உடந்தையாக இருந்த நிலையில், இறுதியில் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெற்றோரிடம் ஒப்படைத்து இருக்கிறார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாந்தா, சந்திரா, சிறுமியை பலாத்காரம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த வினோத் (வயது 29), வி. கைகாட்டி பிரேம் (வயது 29), நாகமங்கலம் பாலு (வயது 27), செந்துறை தனவேல் (வயது 59) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வீடுகளை வாடகைக்கு கொடுத்த கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 62), வெற்றிக்கனி (வயது 37), திருமானூர் தெய்வீகன் (வயது 49) என மொத்தமாக 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 3 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. சிறுமி தற்போது அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.