தொடர் விடுமுறை : அதிரடியாக ஆம்னி பேருந்துகள் எடுத்த முடிவு.. பொதுமக்கள் அதிர்ச்சி.!
தொடர் விடுமுறை : அதிரடியாக ஆம்னி பேருந்துகள் எடுத்த முடிவு.. பொதுமக்கள் அதிர்ச்சி.!
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக அனைவருக்கும் அரசு விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு வார விடுமுறை மற்றும் சுதந்திர தின விடுமுறை இரண்டும் சேர்ந்து தொடர் விடுமுறையாக வருவதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.
இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் வழக்கத்திற்கு மாறாக 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து குமரி செல்ல சாதாரண பேருந்துக்கு ரூ.1400ம், ஏசி பேருந்துக்கு ரூ.2000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
அது போல சென்னையிலிருந்து நெல்லை செல்ல சாதாரண பேருந்துக்கு ரூ.1400ம், ஏசி பேருந்து ரூ.2450 ம் வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னை - மதுரை சாதாரண பேருந்து கட்டணம் ரூ.900 மற்றும் ஏசி பேருந்து கட்டணம் ரூ.1900
சென்னையிலிருந்து சேலம் செல்லும் சாதாரண பேருந்து கட்டணம் ரூ.900 மற்றும் ஏசி பேருந்து ரூ.1400