தனது உயிர் பிரியும் நேரத்திலும் மாணவிகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்! இறுதியில் நேர்ந்த சோகம்!
Auto Driver saved School Girls before he die
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கம் என்பவர் காலையும், மாலையும் பள்ளி மாணவிகளை தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ராமலிங்கம் குழந்தைகளிடம் அதிகம் அன்பு காட்டுவதால் இவரை மாணவிகள் ‘ஆட்டோ மாமா’ என்று அழைத்து வந்தனர்.
மாணவிகளை ஏற்றிகொண்டு வீட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமலிங்கத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்டோவினை நிறுத்திய அவர், மாணவிகளை தனது ஆட்டோவிலிருந்து இறக்கி அடுத்த ஆட்டோவில் ஏற்றி பத்திரமாக அனுப்பியுள்ளார்.
பின்னர் ஆட்டோவில் அமர்ந்தவாறே நெஞ்சுவலியால் துடித்த ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது உயிர் போகும் நிலையிலும் ஆட்டோவை பத்திரமாக நிறுத்தி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் ராமலிங்கத்தின் செயலை நினைத்து அப்பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியும், சோகமும் அடைந்தனர்.