சந்தோஷமான நேரத்தில் 2 வயது குழந்தையால் ஏற்பட்ட மாபெரும் சோகம்! பதறவைக்கும் சம்பவம். திக் திக் நிமிடங்கள்.
Baby fell down into bore well at trichy
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டி எனும் கிராமத்தில் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. மாலை 5.40 மணியளவில் விழுந்த குழந்தையை மிடுக்கும் பணி கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துவருகிறது.
குழந்தை நலமுடன் இருப்பதாகவும், உறவினர்களின் பேச்சுக்கு குழந்தை பதிலளித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதிஆகியோர் மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அறம் படத்தில் வருவதுபோல அந்த பகுதியே மிகவும் பரபரப்புடன் உள்ளது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த கருவியின் மூலம் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. குழந்தையின் இரண்டு கைகளிலும் கயிறு மூலம் சுருக்குப்போட்டு குழந்தையை மேலே தூக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
நாடு முழுவதும் நாளை தீபவளி கொண்டாட இருக்கும் நேரத்தில் மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகைக்காக மிகவும் சந்தோஷத்துடனும், எதிர்பார்ப்புடனும் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் சுஜித்தின் இந்த நிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.