நேற்று சுஜித்! இன்று பவழவேணி.! கவனகுறைவால் அடுத்தடுத்து பலியாகும் மழலைசெல்வங்கள்!!!! துக்கத்தில் மூழ்கிய தமிழகம்
bavalaveni baby dead in septic tank well
பண்ருட்டி அருகேயுள்ள பண்டரக்கோட்டை என்னும் பகுதியில் வசித்து வருபவர் மகாராஜன். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு பவழவேணி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
குழந்தையின் தந்தை மகாராஜனுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பவழவேணியின் தாயார் தனது கணவரை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் அப்பொழுது தனது மகள் பவழவேணியை தன்னுடன் அழைத்துச் செல்லாமல் பக்கத்து வீட்டாரிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
மேலும் இவர்களது வீட்டு வாசலில் செப்டிக் டேங்க் குழி தோண்டப்பட்டு மழைநீர் நிரம்பி இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அதில் விழுந்துள்ளார். அதனை யாரும் கவனிக்காத நிலையில் அவர் மழை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து திரும்பிய பவழவேணியின் பெற்றோர்கள் தங்களது குழந்தையை காணாமல் தேடியுள்ளனர். அப்பொழுது குழந்தை செப்டிக் டேங்க் குழியில் இறந்து மிதப்பதை கண்டு கதறித் துடித்துள்ளனர்.மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.