பெண்களே உஷார்.!! தனியாக வாழும் பெண்களை குறி வைத்து ஏமாற்றிய கேடி மன்னன்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி.?
பெண்களே உஷார்.!! தனியாக வாழும் பெண்களை குறி வைத்து ஏமாற்றிய கேடி மன்னன்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி.?
புதுச்சேரி முத்தையால் பேட்டையில் வசித்து வருபவர் முகமது ஷபான் என்கிற ரஹ்மத்துல்லா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி பல பெண்களை ஏமாற்றி சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் சென்னை போன்ற பெரும் நகரங்களில் தனியாக வசித்து வரும் பெண்கள் குறிப்பாக விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.
முகமது ஷபான் சமூக வலைதளங்களில் பெண்களிடம் பேசி தன்னை நல்லவன் போல சித்தரித்து கொள்வதோடு தான் பெரிய பணக்காரன் என்றும் சொல்லி நம்ப வைத்து விடுவார். மேலும் தான் பெரிய தொழிலதிபர், இரும்பு தொழிற்சாலை நடத்துகிறேன் என்று ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு கதையை அள்ளி விட்டு இருக்கிறான்.
அதுமட்டுமின்றி விதவைப் பெண்களிடம் பேசும் போது விதவைக்கு வாழ்வளிப்பதே என் வாழ்க்கையின் லட்சியம் என்றும் விவாகரத்தான பெண்களிடம் பேசும் போது விவாகரத்தான பெண்களுக்கு வாழ்க்கை தர விரும்புவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு பெண்களிடம் ஆசை வார்த்தையில் நைசாக பேசி ஏமாற்றுவதில் கில்லாடியாக வலம் வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தன் வலையில் விழுந்த பெண்களிடம் நைசாக பேசி பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு தேவைக்கேற்ப அவர்களை பயன்படுத்தி விட்டு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு புது நம்பர் வாங்கி பயன்படுத்த தொடங்கி விடுவதாக சொல்லப்படுகிறது.
இதேப்போல சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 415 சவரன் வாங்கி ஏமாற்றி உள்ளார் முகமது ஷபான். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் போலீசிடம் ரஹ்மத்துல்லா தன்னை திருமணம் செய்வதாக நம்ப வைத்து ஏமாற்றி 415 சவரன் நகையை வாங்கி எஸ்கேப் ஆகி விட்டதாக புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து புகாரின் அடிப்படையில் முகமது ஷாபானை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.