தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மகனை கண்டித்ததால்; தாயை பீர் பாட்டிலால் குத்தி கொடூரமாக கொலை செய்த மகன் கைது...!
தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மகனை கண்டித்ததால்; தாயை பீர் பாட்டிலால் குத்தி கொடூரமாக கொலை செய்த மகன் கைது...!
சென்னை வியாசர்பாடியில் மகா சிவராத்திரிக்காக மாலை அணிந்திருந்த மகன் குடித்து விட்டு வந்ததால் கண்டித்த தாயை பீர்பாட்டிலால் குத்தி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் கண்ணகி இவரது மகன் அஜய் (22). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் என் நிலையில் அஜய் மகா சிவராத்திரிக்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
மாலை அணிந்து விரதம் இருந்து வரும் நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், அஜய்யின் தாய் கண்ணகி அவரை கண்டித்துள்ளார். தாய் கண்டித்ததில், ஆத்திரமடைந்த அஜய் பீர் பாட்டிலால் கண்ணகியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கண்ணகியை பக்கத்தில் இருந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதத்தை மருத்துவர் கண்ணகி இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி காவல் துறையினர் அஜய்யை கைது செய்தனர். குடிபோதையில் பெற்ற தாயை, மகனே பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.