தீபாவளி அன்று பெரும் சோகம்..4 வயது சிறுமி பட்டாசு வெடித்து பலி.!
தீபாவளி அன்று பெரும் சோகம்..4 வயது சிறுமி பட்டாசு வெடித்து பலி.!
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி எந்த அளவுக்கு மகிழ்ச்சியான பண்டிகையோ அதே அளவுக்கு மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய பண்டிகையும் இது தான். ஏனென்றால், கண்கவர் பட்டாசுகள் சற்று அசந்தால் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்திவிடும்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ரமேஷ் - அஸ்வினி தம்பதியினர் தங்கள் 4 வயது மகள் நவிஷ்காவுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை நவிஷ்கா தனது பெற்றோருடன் சந்தோஷமாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி உள்ளார்.
அப்போது பட்டாசு வெடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குழந்தை நவிஷ்கா மீது தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நவிஷ்கா கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் குழந்தையின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைதொடங அங்கு நவிஷ்காவை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குழந்தையின் இறப்பை தாங்க முடியாமல் நவிஷ்காவின் பெற்றோர் மருத்துவமனையில் அழுது கதறி துடித்துள்ளனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து வாழைப்பந்தல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு வெடித்தபோது தீக்காயம் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.