×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: என் மனசெல்லாம் பதறுது., முதல்வரே உறுத்தலையா? பயமே இல்லையா? - அண்ணாமலை கடும் கண்டனம்.!

#Breaking: என் மனசெல்லாம் பதறுது., முதல்வரே உறுத்தலையா? பயமே இல்லையா? - அண்ணாமலை கடும் கண்டனம்.!

Advertisement

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை தனியார் பள்ளியில் பயின்று வந்த 4 ம் வகுப்பு மாணவிக்கு, பள்ளியின் தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வந்த 13 வயது சிறுமி, 3 பேர் கொண்ட ஆசிரியர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாகி இருக்கிறார். வேலூரில் இரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர், அவரை இரயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யவும் முற்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களுக்குள் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகும். இந்த விஷயம் தமிழக அளவில் மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் நடக்காத நாளே இல்லை

இதனால் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று, பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை ஏறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைப்பதிவில், "தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. 

இதையும் படிங்க: காந்திமதி யானை உடல்நலக்குறைவால் பலி: அண்ணாமலை இரங்கல்.!

திமுக பிரமுகரின் மனைவி கொலை

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி தந்த அதிர்ச்சி நீங்கும் முன்னரே, இன்று ஒரு நாள் காலையில் மட்டும், மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள், வேலூரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அவலம், சேலத்தில், அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், திருப்பத்தூரில் வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை என, பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வரிசையாக வருகின்றன.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

எங்கு சென்று கொண்டிருக்கிறது தமிழகம்? மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப, கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது. பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே?" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: #Breaking: பணிந்தது மத்திய அரசு., ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#BJP Annamalai #MK Stalin #tamilnadu #அண்ணாமலை #முக ஸ்டாலின் #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story