#Breaking: விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? - அண்ணாமலை விளக்கம்.!
#Breaking: விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? - அண்ணாமலை விளக்கம்.!
அரசியலில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது. இந்த விஷயம் குறித்து அண்ணாமலை தற்போது செய்தியாளர்களை சந்திக்கையில் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: #Breaking: ஆத்தூர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. திமுக பிரமுகர் தலையீடு? அண்ணாமலை பகிரங்க குற்றசாட்டு.!
இதுகுறித்து அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், "விஜய் ஒரு நடிகர், கட்சியின் தலைவர் என்பதை தவிர்த்து, அவர் தமிழ்நாட்டில், இந்தியாவில் சாதாரணமான மனிதர், இந்தியக் குடிமகன் அவர். பொதுஇடத்திற்கு செல்லும்போது அவருக்கு பாதுகாப்பு தேவை. பொதுவாழ்வில் இது சாதாரணமானது. பாஜக மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறோம். பொதுவாழ்வில் இருப்போருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இந்தியா முழுவதுமே பல கட்சி தலைவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அரசியல் தேவையில்லை
விஜய் எங்களை கருத்து ரீதியாக எதிர்த்தாலும், இந்தியாவில் இருக்கும் அனைவரும் எங்களுக்கு சமம். அதன் பின்னரே எங்களுக்கு அவர் கருத்தியல் பிரச்சனை. பல எதிர்கட்சித் தலைவர்களுக்கும் பாதுகாப்பு என்பது வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசியல் தேவையில்லை.
தமிழ்நாட்டில் பல பாதுகாப்பு நிறுவனங்கள் இருக்கும்போது, திமுக தலைமையிலான அரசு எதற்காக விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க முன்வரவில்லை. விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பதில் அரசியல் இருப்பதாக கூறினால், அவர்களுக்குத்தான் புரிதல் இல்லை. 35 திமுக அமைச்சர்களில் 14 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். ஆகையால், அவரவர் நிலை அறிந்து செயல்பட வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: ரேஷன் கடை வேட்டி-சேலையில் மெகா ஊழல்? சிக்கலில் அமைச்சர் காந்தி.. அண்ணாமலை பகிரங்க குற்றசாட்டு.!