அரிதான நிகழ்வு: நாளை தோன்றப்போகும் ப்ளூ மூன்!! காண மறவாதீர்!!
அரிதான நிகழ்வு: நாளை தோன்றப்போகும் ப்ளூ மூன்!! காண மறவாதீர்!!
நாளை வானத்தில் மிக அரிதான நிகழ்வு ஒன்று நிகழப் போகிறது. அதாவது, ப்ளூ மூன் தோன்றப் போகிறது. அவ்வப்போது ரெட் மூன், ப்ளூ மூன் என்ற அரிதான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அந்த அரிதான நிகழ்வுகளில் ஒன்றான ப்ளூ மூன் நாளை (ஆகஸ்ட் 30) தோன்ற உள்ளது.
இரண்டு முழுநிலவு நாட்கள் ஒரே மாதத்தில் வரும்போது, இரண்டாவது முழுநிலவு நாள் ப்ளூ மூன்எனப்படுகிறது.
இந்த மாதத்தில் முதல் முழுநிலவு நாள் (பௌர்ணமி) ஆகஸ்ட் 01ஆம் தேதி தோன்றியது.
இது வழக்கமாக தோன்றும் முழுநிலவு போல் இல்லாமல், கூடுதல் வெளிச்சத்துடன் பூமிக்கு அருகில் வந்து காட்சியளிக்கும்.
இது போன்ற அரிதான நிகழ்வுகள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
ப்ளூ மூன் என்றவுடன் நீல நிறத்தில் தெரியும் என்று நினைப்போம். சில வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக நிலவானது நீல நிறமாக தோன்றலாம். வாயு மண்டலத்தில் எரிமலைப் புகையும், தூசும் அதிகம் இருந்தால் நிலவின் நிறம் நீலமாக தெரியும். மற்றபடி, உலகின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் பிரகாசமான, வட்டமான முழு நிலவே தோன்றும்.
ப்ளூ மூனை உலகம் முழுவதும் நாளை பார்க்க முடியும். ப்ளூ மூன் நாளைய தினம் இரவு 8.37 மணிக்கு மிகவும் பிரகாசமாக காட்சியளிக்கும்.