ஒகேனக்களில் தொடர்ந்து 4வது நாளாக பரிசல் இயக்க தடை! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
ஓகேனக்களில் தொடர்ந்து 4வது நாளாக பரிசல் இயக்க தடை! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
காவிரி ஆற்றல் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சுற்றுலா தலமான ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீரின் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடிக்கும் மேலான அளவு நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதனால் ஒகேனக்கலுக்கு சுற்றலா செல்லும் பயணிகளின் பொழுதுபோக்குகளுள் ஒன்றான பரிசல் பயணம் ரத்து செய்து தொடர்ந்து நான்காவது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.