முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மிரட்டல் விடுத்த நபர் கைது!
bomb threatto CM
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பகுதி பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்தநிலையில், மேட்டூர் அணையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கும்பொழுது வெடி குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின்போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இருந்து பேசியது தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் உடுமலை அருகே உள்ள குழியூர் பகுதியை சேர்ந்த குமார் (30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.