பயிற்சியின் போது பரிதாபம்.. கார் ரேஸராக விரும்பிய சிறுவன் விபத்தில் மரணித்த சோகம்.!
பயிற்சியின் போது பரிதாபம்.. கார் ரேஸராக விரும்பிய சிறுவன் விபத்தில் மரணித்த சோகம்.!
கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட சிறுவன், பந்தய பயிற்சியில் ஈடுபட்டபோது காரிலிருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சார்ந்தவர் கிருஷ்னெண்டு சாட்டர்ஜி (வயது 48). இவரது மகன் நமன் சாட்டர்ஜி (வயது 16). நமன் சாட்டர்ஜி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம் அதிகம் என்று கூறப்படுகிறது.
அதற்காக பயிற்சி பள்ளியில் கற்றுவந்த நிலையில், கோவையில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் இருக்கும் கார் பயிற்சி பந்தயம் மைதானத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக வருகை தந்துள்ளார். அங்கு அவர் பயிற்சியில் செய்துகொண்டிருந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல பந்தய பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நமன் சாட்டர்ஜியின் கார் கட்டுப்பாட்டில் இழந்து தடுப்புச்சுவற்றில் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட நமன் சாட்டர்ஜியின் தலை மற்றும் இடுப்பு, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நமன் சாட்டர்ஜி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக செட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.