தாய்ப்பால் விற்பனையிலும் கலப்படம், போலி.. தமிழ்நாட்டில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த உத்தரவு.!
தாய்ப்பால் விற்பனையிலும் கலப்படம், போலி.. தமிழ்நாட்டில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த உத்தரவு.!
பூவுலகில் கலப்படம் இல்லாத ஒரு பொருளாக வருணிக்கப்பட்டது தாய்ப்பால். இன்றளவில் பல விழிப்புணர்வுகள் காரணமாக பெற்றோர் ஆதரவு இன்றி தவிக்கும், பால் தட்டுப்பாடு காரணமாக வருந்தும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்ய தாய்ப்பால் தானங்கள் வாயிலாக தாய்ப்பால் பெறப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட வாரியாக தாய்ப்பால் சேகரிப்பு சிறப்பு மையங்களும் மருத்துவமனையில் உள்ளன.
கலப்பட தாய்ப்பால்
இதனிடையே, கடந்த சில நாட்களாகவே தாய்ப்பால் நேரடி விற்பனை நடந்துள்ளது. பல இடங்களில் தாய்ப்பால் என்ற பெயரில் பவுடர் பாலும், போலியான தாய்ப்பாலும் விற்பனை செய்யப்பட்டுள்ள்ளது. தாய்ப்பால் பொதுவெளியில் விற்பனை செய்ய அனுமதில்லாத நிலையில், மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாய்ப்பால் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு; விண்ணப்பிக்க விபரம் உள்ளே.!
200 மில்லி ரூ.800 க்கு விற்பனை
இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கே.ஆர் கார்டன் பகுதியில் கடை நடத்தி வந்த முத்தையா புரோட்டின் பவுடரை தாய்ப்பால் என 200 மிலி பாட்டிலில் விற்பனை செய்து வந்தது தெரியவந்ததது. இவர் தாய்ப்பால் தானம் செய்யும் பெண்களிடம் இருந்து இடைத்தரகர்கள் வாயிலாக பாலை பெற்று, தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் பெற்றோரிடம் ரூ.800 முதல் ரூ.1000 வரை பணம் பெற்று விற்பனை செய்தது உறுதியானது.
அதிகாரிகள் நடவடிக்கை
இவ்வாறாக தொடர்ந்த விற்பனையில் போலியும், கலப்படமும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரிடம் இருந்த 500 பாட்டிலை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை குறித்து 18 சிறப்பு குழுக்களை அமைத்து மாநில அளவில் சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை குறித்து புகார் அளிக்க 94440 42322, 94448 11717 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முக்கிய உத்தரவு..!