ஒரு பிரியாணிக்கும் ஆசைப்பட்டு மொத்தத்தையும் இழந்த இளம்பெண்- வெளியான திடுக்கிடும் தகவல்!
briyani-young girl
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் பிரியா அகர்வால்(21). இவர் தன் நண்பர்களுடன் வடபழனிக்கு வந்துள்ளார்.அப்போது பிரியாணி சாப்பிடலாம் என்று நினைத்து, 'ஊபர் ஈட்ஸ்' மூலம் ஆன்லைனில் ஹைதராபாத் பிரியாணி ஆர்டர் செய்தார்.
அதற்க்கான பில் ரூபாய் 76 வந்தது. அதை ஆன்லைனிலேயே கட்டி விட்டார். ஆனால், என்னவென்று தெரியவில்லை, ஆர்டர் கேன்சல் என்று வந்துள்ளது.அதனால் கஸ்டமர் கால் செய்து கேட்டார் பிரியா. அதற்கு எதிர்முனையில் பேசியவர், உங்களுக்கு 76 ரூபாய் திரும்ப வேணும்னா, 5 ஆயிரம் ரூபாய் கட்டுங்க. அப்படி கட்டினால் 5 ஆயிரத்துடன் இந்த 76 ரூபாயும் திரும்ப கிடைத்துவிடும்" என்று கூறியுள்ளார்கள்.
பிரியாவும், 76 ரூபாயை விட மனசில்லாமல், ஆன்லைன் மூலம் ரூ.5 ஆயிரம் பணத்தை கட்டினார். ஆனால் அவருக்கு அப்போது 2 பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அதனால் மறுபடியும் அதே நம்பருக்கு போன் செய்து கேட்டார். அதற்கு அந்த முனையில் பேசியவர்கள் இன்னொரு ரூ.5 ஆயிரம் அனுப்புங்கள், எல்லா பணமும் சேர்ந்து கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இப்படியே பிரியா 8 முறை 5 ஆயிரம், 5 ஆயிரம் என போட்டுள்ளார். மொத்தம் 40 ஆயிரம் + 76 ரூபாய் + பிரியாணி அனைத்தும் வரவே இல்லை. இதெல்லாம் நடந்து முடிந்து பிறகு, 8 முறை ஏமாந்த பிறகுதான், நாம ஏமாந்துட்டோமோ என்று ஷாக் ஆகி வடபழனி போலீஸ் ஸ்டேஷன் போய் நடந்த சம்பவங்களையும், மெசேஜ்களையும் காட்டினார்.
இதன்பிறகு வடபழனி போலீசார் சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.