லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 150 எருமை மாடுகள், அதிகாலையில் ஏற்பட்ட சலசலப்பு..!
லாரியில் ஏற்றி சொல்லப்பட்ட 150 எருமை மாடுகள், அதிகாலையில் ஏற்பட்ட சலசலப்பு..!
தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு இறைச்சிக்காக எருமை மாடுகள் லாரியில் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த லாரியானது, நாளிரவு நேரங்களில் மாடுகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை வழியே கொண்டுசெல்லப்படுகிறது. இந்தநிலையில், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் எருமை மாடுகளை ஏற்றிகொண்டு நான்கு லாரிகள் வழக்கம் போல் உளுந்தூர்பேட்டை வழியாக வந்துள்ளது. அந்த நான்கு லாரியில் 150 -க்கும் மேற்பட்ட எருமைகள் அதில் இருந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் இந்த நான்கு லாரிகளையும் வழிமறைத்துள்ளனர். பின்பு மாடுகளை சட்டத்திற்கு புறமாக கடத்தி செல்லப்படுகிறது என்று காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளன. மேலும் லாரிகளை மடக்கி பிடித்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கர்கள். இந்த தகவலின் அடிப்படியில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் லாரியை சோதனை செய்தும், லாரி ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
பின்னர், லாரிகளை பிடித்து வைத்திருந்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் காவல் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்துள்ளார். பின்னர், இந்து மகா சபா நிர்வாகிகள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.
மேலும், லாரி டிரைவர்கள், எருமை மாடுகளை கொண்டு செல்வதற்கான முறையான ஆவணங்களை காவல் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.