விடுபட்ட 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.!
by election 2019 - election commition of india
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதி, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலானது வரும் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்நிலையில், வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தன. அண்மையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தது காரணமாகவும் தமிழகத்தில் காலியான சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
இந்நிலையில், அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீதமுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.