பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 ரொக்கம்! தமிழக ஆளுநர் அதிரடி அறிவிப்பு
cash support of 1000 rupee per family for pongal celebration
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் செலவிற்காக ரூபாய் 1000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என சட்டசபையில் ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு தைத்திங்கள் முதல் நாள் தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களது உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவன், கால்நடைகள் ஆகியவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்களால் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. போகி பண்டிகை துவங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் இந்த பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் பரிசாக வழங்கப்படும். ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு போன்ற பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வரும் வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசாக தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கமாக பொங்கல் பரிசாக வழங்கப்படும் என சட்டசபையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பானது அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.