ச்சீ.. நீ எல்லாம் மனுசனா.. 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் போக்சோவில் கைது.!
ச்சீ.. நீ எல்லாம் மனுசனா.. 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் போக்சோவில் கைது.!
பொன்னேரி பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜோசப். இவர் அதே பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனைப் பற்றி அறிந்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஜோசப் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜோசப் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை பொன்னேரி சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இதே போன்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நடந்தது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.