மிஸ் இந்தியாவுக்கு மாஸாக தயாராகும் செங்கல்பட்டு இளம்பெண்.. சிறுவயது லட்ச்சியம் நனவாகும் தூரத்தில் நெகிழ்ச்சி.!
மிஸ் இந்தியாவுக்கு மாஸாக தயாராகும் செங்கல்பட்டு இளம்பெண்.. சிறுவயது லட்ச்சியம் நனவாகும் தூரத்தில் நெகிழ்ச்சி.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் மனோகர். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ரக்சயா (வயது 20). கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ள ரக்சயாவுக்கு சிறுவயதில் இருந்து அழகிப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்துள்ளது.
இதனால் குடும்பத்தின் வறுமையிலும் சொந்த முயற்சியில் பகுதிநேர வேலை பார்த்து தன்னை தயார்படுத்தியுள்ளார். கடந்த 2018-ல் நடைபெற்ற மோனோ ஆக்டிங்கில் வெற்றி அடைந்ததால் அரசின் சார்பில் மலேஷிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கடந்த பிப் மாதத்தில் Forever Star India Awards நடத்திய மாவட்ட அழகிகள் போட்டியில் தேர்வாகிய ரக்சயா, மாநில அளவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு மிஸ் தமிழ்நாடு பதட்டத்தையும் வென்றுள்ளார்.
பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட போட்டிகளில் வின்னர், ரன்னர் என 750 பேர் தேர்வாகியுள்ள நிலையில், இவர்களுக்கு மிஸ் இந்தியா போட்டி டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த வெற்றிக்கோப்பையை கட்டாயம் நான் வாங்குவேன் என ரக்சயா உறுதிபட தெரிவிக்கிறார்.