குடும்பத்தினர் கண்முன் ரௌடி சரமாரியாக வெட்டி கொலை.. திரைப்பட பாணியில் கதறக்கதற நடந்த பயங்கரம்.!
குடும்பத்தினர் கண்முன் ரௌடி சரமாரியாக வெட்டி கொலை.. திரைப்பட பாணியில் கதறக்கதற நடந்த பயங்கரம்.!
மாமனார், மாமியார், மனைவி, குழந்தைகள் கண்முன் ரௌடி திரைப்பட பாணியில் கதறக்கதற வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளர். குடும்பத்தினர் மன்றாடியும் குழந்தைகள் கழுத்தில் கத்தி வைத்து நடந்த கொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள மறைமலைநகர், பொத்தேரி பெரியார் தெருவில் வசித்து வருபவர் சந்துரு (வயது 27). இவர் உள்ளூரில் ரௌடியாக வலம்வருகிறார். இவரின் மீது மணிமங்கலம், மறைமலைநகர், ஓட்டேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, அடிதடி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் மனைவி பிரீத்தி (வயது 26). தம்பதிக்கு 5 வயதுடைய வருண் என்ற மகனும், கைக்குழந்தையாக பெண் குழந்தையும் இருக்கின்றனர்.
பிரீத்தி சமீபத்தில் குழந்தையை பிரசவித்ததால் தாய் வீட்டில் இருக்கிறார். மனைவி, குழந்தைகளை பார்க்க சந்துரு அவ்வப்போது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக சந்துருவின் நடவடிக்கையை கவனித்த கூலிப்படை, மாமியார் வீட்டிற்கு அவர் தனியாக வந்து செல்வதை அறிந்து இருக்கின்றனர். நேற்று மதியம் 12:30 மணியளவில் மாமியார் வீட்டிற்கு புறப்பட சந்துரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
இதனை அறிந்த கூலிப்படை சந்துரு தனது மாமியாரின் வீட்டிற்குள் சென்றதும் அவரை சுத்துப்போட்டுள்ளது. திரைப்பட பாணியில் மாமியார், மாமனார், குழந்தைகள், மனைவி கழுத்தில் கத்தியை வைத்து சந்துருவை மிரட்ட, பாத்ரூமில் ஒழிந்து இருந்த அவர் வெளியே வந்துள்ளார். சந்துருவின் வருகைக்காக காத்திருந்த கூலிப்படை, அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.