பாலாற்றில் குளிக்க சென்ற 3 பேரின் கதி என்ன?.. குடும்பத்தினர் கண்ணீர் கதறல்.!
பாலாற்றில் குளிக்க சென்ற 3 பேரின் கதி என்ன?.. குடும்பத்தினர் கண்ணீர் கதறல்.!
குடும்பத்துடன் பாலாற்றுக்கு குளிக்க சென்ற நிலையில், குடும்பத்தினர் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சோகம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு பாலாற்றில் 90 வருடத்திற்கு பின்னர் வெள்ளம் சென்றது. தற்போது குறைந்தளவு நீரே செல்லும் நிலையில், விடுமுறை நாட்களில் பலரும் பாலாற்றுக்கு சென்று குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். காவல் துறையினர் ஆற்றின் ஆபத்தை தெளிவுபடுத்தி குளிக்க வேண்டாம் என எச்சரித்தாலும் பலனில்லை.
காவல்துறையினர் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ள பகுதியை தவிர்த்து, புதிய இடங்களுக்கு சென்று மக்கள் குளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள திரிசூலம் பகுதியை சார்ந்த 10 க்கும் மேற்பட்டோர், செங்கல்பட்டு இருங்குன்றம்பள்ளியில் உள்ள பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் குளித்துக்கொண்டு இருக்கையில், எதிர்பாராத விதமாக 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை. பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிசூலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த லியோனிசிங் ராஜா (வயது 38), அவரது மகள் பெர்சி (வயது 16), ராஜ்வின் அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன் (வயது 20) ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். 3 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. இதனால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.