கணவரை இழந்த பெண் டார்கெட்.. நட்பு, காதல், பலாத்காரம் மிரட்டல்.. சொல்வதெல்லாம் உண்மையில் புரட்சி பேச்சு.!
கணவரை இழந்த பெண் டார்கெட்.. நட்பு, காதல், பலாத்காரம் மிரட்டல்.. சொல்வதெல்லாம் உண்மையில் புரட்சி பேச்சு.!
கணவரை இழந்த பெண்ணை திட்டமிட்டு ஏமாற்றி, காதல் வலையில் வீழ்த்திய காதலர் உல்லாசமாக இருந்து 3 வருடமாக பெண்ணை திருமணம் செய்வதாக அலைக்கழித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர், ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சோபனா (வயது 28). இவருக்கு கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் வாகன விபத்தில் சோபனாவின் கணவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, கணவரை இழந்து 7 வயது மகளுடன் வசித்து வந்த சோபனாவுக்கு, விக்னேஸ்வரன் (வயது 28) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இவர் புழல் M3 காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் கடந்த 2018 ஆம் வருடம் முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 வருடங்கள் இருவரும் நண்பராக பழகி வந்த நிலையில், கடந்த 2020 அக். 10 ஆம் தேதி விக்னேஸ்வரன் சோபனாவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். நண்பனாக பழகி காதலை வெளிப்படுத்தியதால், தன் மீது உண்மையான அன்பு வைத்திருப்பதாக சோபனாவும் எண்ணியுள்ளார்.
காதலிப்பதாக கூறிய 37 நாட்கள் கழித்து, நவ. 6 ஆம் தேதி 2020 அன்று விக்னேஸ்வரன் காதலியை நேரில் பார்க்க சென்ற நிலையில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை என 2 முறை இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த டிச. 23 ஆம் தேதி 2020 ஆம் வருடம் சோபனா கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை தனது காதலனிடம் தெரிவிக்க, அதிர்ச்சியில் உறைந்துபோன விக்னேஸ்வரன் கருவை கலைக்க மாத்திரையோடு சென்றுள்ளார்s. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, நான் உன்னை திருமணம் செய்ய பழகவில்லை. நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று சோபனாவை விக்னேஸ்வரன் மிரட்டி இருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தவித்த சோபனா, சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படாததால், மார்ச் 13 ஆம் தேதி 2021 அன்று செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விக்னேஸ்வரன் சோபனாவை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், இருவரும் சேர்ந்து சோபனாவின் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் வைத்தே மஞ்சள் கயிற்றில் விக்னேஸ்வரன் தாலிகட்டி இருக்கிறார். சோபனாவை வீட்டில் இருக்கவைத்து வேலைக்கு என புறப்பட்டு சென்ற காவலர் விக்னேஸ்வரன், மாதம் ஒருமுறை என எப்போதாவது சோபனாவுடன் பேசி இருக்கிறார். அவ்வப்போது செல்போனையும் ஸ்விச் ஆப் செய்துள்ளார். இதுகுறித்து காரணம் கேட்டும் பதில் இல்லாததால், என்னை உனது வீட்டிற்கு அழைத்து செல் என சோபனா விகேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த நவ. 26 ஆம் தேதி 2021 அன்று புழலில் உள்ள கோவிலுக்கு பெற்றோரை அளித்து வந்த விக்னேஸ்வரன், சோபனாவையும் அழைத்து சென்று குடும்பத்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். விக்னேஸ்வரனின் பெற்றோர் சோபனாவை ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், அங்கிருந்து அவரை மிரட்டி விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார். இதனால் நவ. 21 ஆம் தேதி 2021 அன்று மீண்டும் சோபனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, வழக்கு குடும்ப நலத்துறைக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், டிச. 12 ஆம் தேதி 2021 அன்று சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் M3 புழல் காவல் உதவி ஆணையர் ஆகியோரிடம் சோபனா புகார் அளித்துள்ளார். அந்த புகார் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதா வசியராணி நடத்தியுள்ளார்.
சுதாவோ பெண்ணை ஏமாற்றிய விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், 10 நாட்கள் அலைந்து மனமுடைந்துபோன சோபனா நேற்று தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். மேலும், விக்னேஸ்வரனுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆயத்தமாகியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட காவலர் விகேஸ்வரன் கடந்த 2016 ஆம் வருடம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஏற்கனவே மணமான பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.