தவறான சிகிச்சையால் பிரசவத்தின் போது துண்டான குழந்தையின் தலை; வெளியான அதிர்ச்சி சம்பவம்.!
chennai - kanchipuram - koovaththur - born baby death
பிரசவத்தின் போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் சென்னை கூவத்தூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நள்ளிரவு பொம்மி என்ற பெண்மணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு இருந்த செவிலியர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
சுகப்பிரசவம் ஆகும் நிலையில் அந்த பெண்மணி ஆனவர் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். இதனால் இடுக்கியை கொண்டு அக்குழந்தையை வெளியே எடுக்கும்பொழுது தலை மட்டும் துண்டாக வெளியே வந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் வேறுவழியில்லாமல் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர்களின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு வயிற்றில் இருந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. அதன் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அப்பெண்மணி சிகிச்சை பெற்று வருகிறார்.
கிராம மக்கள் வந்து செல்லும் சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவர்கள் இல்லை என்பதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை சாமி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.