அப்டிப்போடு.. வேலைகொடுத்த முதலாளிக்கே துரோகம்.. நடுவழியில் சிக்கிய வடக்கன்ஸ்.! திருட்டு இன்பம் ஒருமணி நீடிக்காத சோகம்.!
அப்டிப்போடு.. வேலைகொடுத்த முதலாளிக்கே துரோகம்.. நடுவழியில் சிக்கிய வடக்கன்ஸ்.! திருட்டு இன்பம் ஒருமணி நீடிக்காத சோகம்.!
வேலைக்கு சேர்ந்த 2 வாரத்தில் கல்லாப்பட்டி சாவி வரை பெற்றுக்கொண்ட வடமாநில தொழிலாளி, தனது முதலாளியான வடமாநில உரிமையாளரின் கண்களில் மண்ணைத்தூவி தப்பிச்சென்றபோது பிடிபட்டார்.
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை, வீராசாமி தெருவில் வசித்து வருபவர் ஜெலாம்சிங் (வயது 42). இவர் பூக்கடை கிருஷ்ணா ஐயர் தெருவில் பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜாராம் (வயது 23) என்பவர் வேலை கேட்டு வந்துள்ளார்.
ஜெலாம் சிங் இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், தன்மாநிலத்தை சேர்ந்த ராஜாராமுக்கு வேலை கொடுத்துள்ளார். மேலும், வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே கள்ளச்சாவி உட்பட அனைத்தையும் வழங்கியுள்ளார். கடையிலேயே தங்கியிருந்த ராஜாராம், நேற்று முன்தினம் தனது சகோதரன் பிரகாராம் (வயது 32) உதவியுடன் கதையில் இருந்த ரூ.7,85,000 ரொக்கம், 19 வெள்ளி காயின், விநாயகர் சிலை, 2 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இரவு நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட பூக்கடை காவல் துறையினர், வால்டாக்ஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்றுகொண்டு இருந்த சகோதரர்களை பிடித்து விசாரணை செய்த்துள்ளனர். அப்போது, அவர்களின் பையை திறந்துபார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது.
இதனையடுத்து, பூக்கடை காவல் நிலையத்திற்கு இருவரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியபோது வேலைபார்த்த கடையிலேயே கைவைத்த சம்பவம் உறுதியானது. இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சகோதரர்களை சிறையில் அடைத்தனர். நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணம் மற்றும் பிற பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.
உழைத்த பணம் உன்னை விட்டு சென்றாலும் உன்னை வந்து சேரும்.. திருட்டு பணம் தண்டனைக்கே வழிவகை செய்யும் என்பதை புரிந்தால் சுபம்.