மக்கள் பாஜகவை பஸ்பமாக்கிவிடுவார்கள்., தேசத்துரோக புழுக்களாக பாஜக - முக்கியப்புள்ளி பரபரப்பு பேட்டி.!
மக்கள் பாஜகவை பஸ்பமாக்கிவிடுவார்கள்., தேசத்துரோக புழுக்களாக பாஜக - முக்கியப்புள்ளி பரபரப்பு பேட்டி.!
நங்கநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மூவர்ணக்கொடியை பாஜகவினர் அவமதிப்பு செய்ததாக தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஆலந்தூர், நங்கநல்லூர் முதல் ஆதம்பாக்கம் வரையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர். இந்நிகழ்ச்சியை வழிநடத்தி தொடங்கிவைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "இந்திய சுதந்திர தினத்தின் பவள விழாவிற்கு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தான் சொந்தக்காரர்கள். இன்று தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள் மூவர்ணக்கொடியை தூக்கி வைத்துள்ளார்கள். நிதியமைச்சரின் காரில் தேசியக்கொடி உள்ளது. அவரின் மீது பாஜகவினர் செருப்பு வீசியுள்ளனர்.
தேசியக்கொடியின் மீது மரியாதை இருந்து இருக்கும் பட்சத்தில் செருப்பு வீசப்பட்டு இருக்குமா?. பா.ஜ.க-வினர் ரௌடிசம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக்கள் பொங்கியெழுந்தால் சாம்பலாகிவிடுவார்கள். நாட்டை காப்பாற்றும் தாய்கட்சி காங்கிரஸ். தேசத்துரோக புழுக்களை நாம் அழிக்க வேண்டும். அதற்காக எந்த ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம். எங்களுக்கு கொடிபிடிக்கவும் தெரியும், கொடியை திருப்பி பிடித்து தடியாக்கவும் தெரியும்" என்று தெரிவித்தார்.