சென்னையில் வீடு வீடாக சென்று முடிவெட்டிய சலூன் கடைக்காரருக்கு கொரோனா! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
chennai barber tested corono positive
சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் சலூன் கடை நடத்தி வரும் நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருவருக்கு கொரோனா உறுதியனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் நபருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் சலூன் கடைகளும் திறக்க அனுப்பி அளிக்கப்படவில்லை. இதனால் தெரிந்தவர்கள் பலரும் வீட்டிலே முடி மற்றும் சேவிங் செய்து கொள்கின்றனர்.
ஆனால் அதைப்பற்றி எதுவும் தெரியாதவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோயம்பேட்டை சேர்ந்த சலூன் கடைக்காரர் வீடு வீடாக சென்று முடி மற்றும் சேவிங் செய்துள்ளார். மேலும் தடையை மீறி சில நாட்களுக்கு முன்பு தனது சலூன் கடையையும் திறந்து முடி வெட்டுதல் மற்றும் சேவிங் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த சலூன் கடைக்காரருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தி அவரிடம் முடி வெட்டிக்கொண்ட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சலூன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் முடி வெட்டிக்கொண்டவர்களை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றும் அவர் சென்ற வீடுகளில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.