பொதுஇடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் - சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை.!
பொதுஇடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் - சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை.!
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவறை என்பது பெரும் கஷ்டப்படான விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. சில நேரங்களில் அவை பராமரிப்பு இன்றி மக்கள் உபயோகம் செய்யும் அவலமும் நடக்கிறது.
இந்த நிலைமையை மாற்ற அரசு தேவையான அளவு முயற்சிகளை எடுத்து, வளர்ச்சிக்கேற்ப மொபைல் டாய்லெட் வசதிகளையும் கொண்டு வந்துவிட்டது. ஆனால், நம் மக்களிடம் சில மனப்பான்மை என்பது மாறாமல் இருப்பது, அந்த திட்டத்தின் பயனை அடையவிடாமல் தடுக்கிறது.
இந்நிலையில், "சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் வசூல் செய்யப்படும். கழிப்பிடங்கள் இருக்கும் பொதுஇடங்களில் சிறுநீர் கழிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரிடம் அபராதம் வசூல் செய்யும் திட்டமானது தீவிரப்படுத்தப்டுகிறது" என மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.