தடியூன்றி நடந்தாலும் மக்கள் பணி ஆர்வம்.. 94 வயதில் வேட்புமனுத்தாக்கல் செய்த மூதாட்டி.!
தடியூன்றி நடந்தாலும் மக்கள் பணி ஆர்வம்.. 94 வயதில் வேட்புமனுத்தாக்கல் செய்த மூதாட்டி.!
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் தேர்தலில் களமிறங்கி இருக்கின்றனர்.
கணவன் - மனைவி, மாமியார் - மருமகள், அரசியல் பிரமுகரின் மகள்/மகன் எதிரெதிர் வேட்பாளராக களமிறங்கி வருவதால், நகர்ப்புற தேர்தலில் பல சுவாரசிய சம்பவமும் நடந்து வருகிறது. இந்த நிலையில், 94 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பெசன்ட் நகர் மைக்கோ காலனியை சேர்ந்த மூதாட்டி காமாட்சி (வயது 94). இவர் மாநகராட்சியின் 174 ஆவது வார்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ரூ.91 இலட்சத்து 61 ஆயிரத்து 835 மதிப்பில் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தடியூன்றும் காலத்திலும் தான் வாழ்ந்த பகுதிக்கு தன்னால் இயன்றவற்றை செய்து தர வேண்டும் என்று தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் மூதாட்டி குறிப்பிடுகிறார்.