கொரோனா வார்ட்டாக மாறப்போகும் திருமண மண்டபங்கள்..! அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ்.!
Chennai corporation planned to use marriage halls as corono ward
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் திருமண மண்டபங்களை கொரோனா வார்டுகளாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. நேற்றுமட்டும் சென்னையில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தையால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகள் அனைத்தும் நிரம்பிவழியும் நிலையில் கொரோனா சிகிச்சைக்கு மாற்று ஏற்பாடு செய்யும் விதமாக அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சிக்கு தருமாறு திருமண மண்டப உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.