படிக்கட்டு பயணத்தால் உயிருக்கு போராடும் பயணி; சென்னை - குருவாயூர் இரயிலில் இருந்து தவறி விழுந்து சோகம்.!
படிக்கட்டு பயணத்தால் உயிருக்கு போராடும் பயணி; சென்னை - குருவாயூர் இரயிலில் இருந்து தவறி விழுந்து சோகம்.!
சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து, கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் நகரை இணைக்கும் பொருட்டு தினமும் காலை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயிலில், முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர், படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இரயில் புறப்பட்டு செங்கல்பட்டு அருகே சென்றபோது, பயணி தவறி விழுந்து இருக்கிறார். இதனையடுத்து, உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் யார்? எங்கிருந்து எங்கு பயணம் செய்து கொண்டிருந்தார்? என்று தொடர்பான விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.