புயல் வெள்ளத்தை கடந்து வீட்டிற்கு திரும்பும் சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சி.. நகை, பணங்கள் கொள்ளை.!
புயல் வெள்ளத்தை கடந்து வீட்டிற்கு திரும்பும் சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சி.. நகை, பணங்கள் கொள்ளை.!
சென்னையை புரட்டியெடுத்த மிக்ஜாங் புயல் வெள்ளமானது தற்போது நகரில் இருந்து வெளியேறியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர், இராட்சத பம்புகள் கொண்டு வெளியேற்றப்பட்டன. வெள்ளம் தேங்கியிருந்த குடியிருப்புகளில் இருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அடுக்குமாடி குடியிப்புகளில் வசித்து வந்த மக்கள், குடியிருப்பில் இருந்து வெளியேறியிருந்தனர். இதனால் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு, திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது தற்போது அப்பளமாகியுள்ளது.
வரதராஜபுரம் பகுதியில் உள்ள விஷ்ணு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கிருந்த மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு தங்களின் உறவினர் வீடுகளுக்கும், முகாம்களுக்கும் குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், வெள்ளம் வடிந்த பின்னர், அவர்கள் வீட்டிற்கு வந்த போது வீட்டில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை திருடுபோனது உறுதியானது.
விசாரணையில், மொத்தமாக அக்குடியிருப்பு வளாகத்தில் இருந்த 6 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் இருந்த ரூபாய் 3 லட்சம் ரொக்கம், 60 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.