கடுமையான வயிற்று வலியால் துடித்த இளம்பெண்.. டாக்டரிடம் அழைத்து சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
chennai-girl-faints-in-home-found-pregnant-married-man-arrested
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்ப்பட்டுள்ளது. உடனே அந்த இளம்பெண்ணின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பிரவச வலியால் தான் அந்த பெண் துடிப்பதாக கூறியுள்ளனர்.
அதனை அடுத்து சில மணி நேரத்திலேயே அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இவை எப்படி நடந்திருக்கும் என்று அறியாமல் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் குழப்பத்தில் இருந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வந்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புழலைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் ஒரு நாள் மதுரவாயல் வழியாக சென்று கொண்டிருந்த போது அவரது மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகிப் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு முன்பு நின்றுள்ளது. அப்போது அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற லோகேஷ் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார்.
அந்த பெண்ணும் குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். அதனை வாங்கி குடித்த லோகேஷ் அந்த பெண் அழகாக இருப்பதை பார்த்து எப்படியாவது அந்த பெண்ணிடம் பேசி பழக வேண்டும் என்று நினைத்து செல்போன் நம்பரை அந்த பெண்ணிடம் கொடுத்து சென்றுள்ளார்.
அவர்களது பழக்கம் தொடர்ந்து நாளடைவில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். அவர்கள் இருவரும் நெங்கி பழகியதில் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். அதனை லோகேஷிடம் அந்த பெண் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு லோகேஷ் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் கர்ப்பத்தை கலைத்து விடு என கூறியுள்ளார். அப்பெண்ணும் இச்சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் எந்த தகவலும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து தற்போது குழந்தை பிறந்தபின்பு தங்களது மகள் கர்ப்பமாக இருந்த தகவலே அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது. தற்போது லோகேசை கைது செய்த போலீசார் அவருடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.