தின்னர் பேரல் வெடித்து 2 தொழிலாளர்கள் படுகாயம்.. கட்டுமான தொழிலாளர்களே ஜாக்கிரதை.!
தின்னர் பேரல் வெடித்து 2 தொழிலாளர்கள் படுகாயம்.. கட்டுமான தொழிலாளர்களே ஜாக்கிரதை.!
சென்னையில் உள்ள கிண்டி, இந்தியன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் வேளச்சேரி கேட் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது.
அப்போது, கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள 20 லிட்டர் தின்னர் பேரலை காளி (வயது 20), மஞ்சுநாத் (வயது 33) என்ற 2 கட்டுமான தொழிலாளர்கள் கீழ் தளத்திற்கு கொண்டு வந்துகொண்டு இருந்தனர். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக தின்னர் பேரால் கீழே விழுந்து வெடித்து சிதறியுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 2 தொழிலாளர்களும் உயிருக்கு போராட, பிற தொழிலாளர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இவர்களில் காளி மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 3 மாதங்களுக்கு மேல் தின்னர் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு இருந்ததால், வாயு உற்பத்தியாகி வெடித்து விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.