#JustIN: டிக் டாக் பிரபலம் ரௌடி பேபி சூர்யா மீதான குண்டாஸ் விவகாரம்; ஷாக் டிரீட்மென்ட் கொடுத்த நீதிபதிகள்.. கடலிலேயே இல்லையாம்.!
#JustIN: டிக் டாக் பிரபலம் ரௌடி பேபி சூர்யா மீதான குண்டாஸ் விவகாரம்; ஷாக் டிரீட்மென்ட் கொடுத்த நீதிபதிகள்.. கடலிலேயே இல்லையாம்.!
குண்டாஸ் சட்டத்தை எதிர்த்து ரௌடி பேபி சூர்யா முறையீடு செய்த வழக்கில், தற்போதைக்கு எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
டிக் டாக் செயலியில் பிரபலமாக இருந்தவர் சூர்யா என்ற ரௌடி பேபி சூர்யா. இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான விடீயோக்களை வெளியிட்டு வந்தார். இதற்கிடையில், அவர் திருச்சியில் அழகு நிலையம் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாகவும் பகீர் தகவல் கிடைத்தன.
அதுமட்டுமல்லாது, தன்னுடன் நன்றாக பழகி வரும் சமூகவலைத்தள பெண் நண்பர்களிடம், மலேஷியாவில் நல்ல வேலை என அழைத்து சென்று விபச்சார தொழிலில் தள்ளியதாகவும் என பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சூர்யா கோவை மாவட்டத்தை சேர்ந்த யூடியூபர், அவரின் குடும்பத்தை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
அவரின் பல்வேறு விடியோக்கள் பிறரை அவதூறாக பேசுவதுபோன்று பதிவு செய்யப்பட்டு இருந்ததால், அவரின் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தன் மீதான குண்டர் சட்டத்தினை இரத்து செய்ய வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இன்று அவ்வழக்கு தொடர்பான விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ரௌடி பேபி சூர்யாவின் டிக் டாக் விடீயோக்களை பார்த்து பேரதிர்ச்சியடைந்த நீதிபதிகள், குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என அறிவித்துள்ளனர்.
எப்படியாவது தன் மீதான குண்டாஸ் சட்டம் இரத்து செய்யப்படும் பட்சத்தில், ஜாமின் பெற்றவது வெளியே வந்திடலாம் என ரௌடி பேபி சூர்யா கம்பி வைத்த சிறைக்குள் பகல் கனவோடு காத்திருந்த நிலையில், நீதிபதிகளின் உத்தரவு கானல் நீரைப்போல சூர்யாவுக்கு காட்சியளித்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.