#Breaking: சாதி-மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரமே இல்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
#Breaking: சாதி-மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரமே இல்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
சாதி-மதமற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்புதலுடன் வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தோஷ் என்பவர் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இன்று தனது இறுதி வாதங்களை கேட்டறிந்து. அப்போது, "சாதி - மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழை மட்டுமே அவர்களால் வழங்க இயலும்" என அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சாதி - மதமற்றவர் சான்றிதழை வழங்க அதிகாரம் இல்லை. சட்டத்திலும் சாதி-மதமற்றவர் என்ற இடம் சான்றிதழ் வழங்க இடம் இல்லை. இது எதிர்கால சந்ததிக்கு, இடஒதுக்கீட்டில் பிரச்சனை தரும்" என்பதை தெளிவுபடுத்திய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.