#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விவகாரம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. "திமுக உறுப்பினர் வெற்றி செல்லும்" - அறிவிப்பு.!
#Breaking: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விவகாரம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. திமுக உறுப்பினர் வெற்றி செல்லும் - அறிவிப்பு.!

இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில், கடந்த ஜூலை 2024ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்த புகழேந்தி மறைந்ததைத்தொடர்ந்து, மீண்டும் அத்தித்தொகுதியில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 124053 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் அன்புமணி 56296 வாக்குகள் பெற்றார். நாம் தமிழரின் அபிநயா 10602 வாக்குகள் பெற்றார்.
இதையும் படிங்க: காதலி கொலைக்கு பழிவாங்க ஸ்கெட் போட்ட காதலன்; முந்திக்கொண்ட ரௌடி.. 2 பேர் சரமாரி வெட்டிக்கொலை.!
நீதிபதிகள் உத்தரவு
இதனிடையே, இடைத்தேர்தல் முறையாக நடைபெறவில்லை. இதனால் அன்னியூர் சிவாவின் வெற்றியை நிராகரித்து உத்தரவிட வேண்டும் என ராஜமாணிக்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி இளந்திரையன் தலைமையிலான அமர்வு இன்று வழக்கை முடித்து வைத்தது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தகவல்படி, அங்கு முறைகேடுகள் ஏதும் நடந்ததாக விபரங்கள் பதிவு செய்யப்படாத நிலையில், அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியை நிராகரிக்க தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பூஜை செஞ்சா குடும்ப பிரச்சனையெல்லாம் சரியாயிடும்.. இளைஞரிடம் நகை ஏமாற்றிய பெண் கைது.!