டிப்ளோமா படித்தவரா நீங்கள்?.. இனி சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
டிப்ளோமா படித்தவரா நீங்கள்?.. இனி சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
கோவையை சேர்ந்த மாணவி கோமதி சென்னை உயர்நீதிமன்றத்தில், "10ம் வகுப்பு பயின்று பனிரெண்டாம் வகுப்பு பயிலாமல் நேரடியாக 3 ஆண்டுகள் டிப்ளமோ பயின்று பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு சட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. டிப்ளமோ பயின்றவர்களும் படிக்க ஆவணம் செய்ய வேண்டும்" என மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இந்திய பார்கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "10ம் வகுப்புக்கு பின்னர் 3 ஆண்டுகள் டிப்ளமோ படித்து பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்பு படிக்க தகுதியானார்கள் என பார் கவுன்சில் முடிவெடுத்து இருக்கிறது" என தெரிவித்தார்.
இதனையடுத்து, இருதரப்பு வாதங்களை குறித்துக்கொண்டு நீதிபதி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலை., மேற்படியான உத்தரவை அறிவித்து அமல்படுத்த ஆணையிட்டார். இது டிப்ளமோ படித்த இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.